தமிழகம்

அதிமுக பிரமுகர் தற்கொலை

செய்திப்பிரிவு

சென்னை பெரம்பூர் அருகே பட்டாளம் டிம்ளர்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜா (44). 77 வது வட்ட அதிமுக பிரதிநிதி. அதிமுகவில் தீவிர ஈடுபாடு கொண்டவர். ஜெயலலிதா மட்டும் பதவி ஏற்கவில்லை என்றால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்றும் கூறி வந்தாராம். இந்நிலை யில் நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியில் சென்றவர், பெரம்பூர் - வியாசர் பாடி ரயில் நிலையம் இடையே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாராம். பெரம்பூர் ரயில்வே போலீஸார் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோத னைக்காக அனுப்பினர். இறந்த ராஜாவுக்கு மனைவியும் இரு மகன்களும் மகளும் உள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT