ஒரு காலத்தில் ரயில்வே நிலையத்தில் டீ விற்ற மோடி இந்திய பிரதமராக பதவியேற்பதை முன்னிட்டு திங்கள்கிழமை நாகப் பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அருந்தவப்புலத்தில் ஒரு டீக்கடையில் ஒரு ரூபாய்க்கு டீ விற்கப்பட்டது.
அருந்தவப்புலத்தில் டீக்கடை வைத்திருக்கும் சுந்தரமூர்த்தி என்பவர், டீ விற்றவர் பிரதமராவதை முன்னிட்டு திங்கள்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு ரூபாய் விலையில் டீ விற்பனை செய்தார்.
காலையில் தொடக்கிய சிறப்பு சலுகை விலை விற்பனையில் வர்த்தக சங்க தலைவர் சித்திரைவேலு, சமூக ஆர்வலர் ஜெயக்குமார் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.