அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாகியுள்ள நிலையில் துணிச்சலும் செயல்திறனும் மிக்க அவர் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று பாஜக.வை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
சேலத்தில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: அதிமுகவுடன் பாஜ கூட்டணி வைத்துக் கொள்ளும் என்று கூற முடியாது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ளது. அதுவரை நேர்மையான, திறமையான நல்ல முதல்வர் தேவை. அதனாலேயே அவர் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்கிறேன்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளவர்கள் வெளியில் போகக்கூடாது என விரும்புகிறோம். அவர்கள் நிச்சயம் வெளியேற மாட்டார்கள். எங்கள் கூட்டணியில் இன்னும் சிலர் சேருவார்கள். திமுக, அதிமுக.வுக்கு மாற்றாக பாஜக ஆட்சிக்கு வரும் என நம்புகிறோம்.
தமிழக முதல்வர் பன்னீர்செல் வம் பொறுப்புக்கு வந்து சில மாதங்களே ஆவதால், அவரின் செயல்பாடுகளை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஊழல் மலிந்து விட்டதா என்றால், தேர்தல் விரை வில் வர உள்ளது. அதில் மக்கள் நல்ல முடிவை எடுப்பார்கள்.
மேகேதாட்டு அணை பிரச்சனையில் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.
மத்திய அரசு தமிழகத்துக்கான பல்வேறு திட்டங்களை நிறை வேற்றி வருகிறது. குளச்சல் துறை முகத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த துறைமுகம் மேம்படுத்தப் பட்டால் தமிழத்தில் உள்ள தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெரும். இதனால் வேலைவாய்ப்பு உரு வாகும். இந்த திட்டத்துக்கு மட்டு மல்லாமல் அனைத்து திட்டங் களுக்கும் தமிழக அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.
மத்திய அரசு செயல் படுத்தும் திட்டங்கள் தமிழகத் தில் தாமதப்படுத்தப்படுவதாக கூறமுடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.