மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது.
இதையொட்டி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமயிலை பறக்கும் ரயில் நிலைய வளாகத்தில் நடை பெறும் இக்கண்காட்சியை மத்திய தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் கே.முத்துக்குமார் நேற்று தொடங்கி வைத்தார். 7 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் மொத்தம் 77 புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கண்காட்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் சென்னை தொலைக்காட்சி செய்திப் பிரிவு இயக்குநர் அண்ணாதுரை, கள விளம்பரப் பிரிவு இயக்குநர் நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.