திரைப்பட விநியோகஸ்தர் மீது நடிகை வனிதா விஜயகுமார் சென்னை மாநகர காவல் ஆணை யர் அலுவலகத்தில் புகார் கொடுத் துள்ளார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நடிகை வனிதா விஜயகுமார் நேற்று பிற்பகல் வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், "வனிதா என்கிற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நான் நடத்தி வருகிறேன். இதன் மூலம் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் ரசிகர்கள் நற்பணி மன்றம் என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்தேன். அதை வெளியிடுவதற்கான உரிமையை 'வைப்ரான்' நிறுவ னத்துக்கு கொடுத்திருந்தேன். இந்நிறுவன உரிமையாளர் வெங்கடேஷ்ராஜாவுடன் முறைப்படி ஒப்பந்தமும் போட்டிருக்கிறேன். அதில் 80 தியேட்டர்களில் படத்தை வெளியிடுவதாக கூறப்பட்டு உள்ளது. ஆனால், ஒப்பந்தப்படி வெங்கடேஷ்ராஜா அந்த படத்தை வெளியிடவில்லை. குறிப்பிட்ட சில தியேட்டர்களில் மட்டுமே படத்தை வெளியிட்டு உள்ளார்.
மேலும், விளம்பர செலவுகள் என்று கூறி ரூ.38 லட்சத்தை என்னிடமிருந்து வாங்கியிருக்கிறார். அதையும் அவரிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும்" என்று புகாரில் கூறப்பட்டிருந்தது.