தமிழகம்

45 ஆயிரம் பேருக்கு இலவச பட்டா: மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

திருவள்ளுர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 45,360 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், நசரத்பேட்டை ஊராட்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமுக்கு தலைமை வகித்து, மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 148 பயனாளிகளுக்கு ரூ. 4.25 கோடி மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் வீரராகவ ராவ் பேசியதாவது:

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான இடங் களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் 45,360 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 3 கட்டங்களாக 4,43,000 குடும்பங் களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்பட்டு, தற்போது 4-வது கட்டமாக 2,16,000 குடும்பங்களுக்கு வழங்கப் பட்டு வருகிறது. 5-வது கட்டமாக 2,15,000 குடும்பங்களுக்கு விரைவில் வழங்கப்படவுள்ளது என்றார்.

திருவள்ளூர் சார் ஆட்சியர் ராகுல் நாத், பூந்தமல்லி எம்எல்ஏ மணிமாறன், பூந்தமல்லி வட்டாட்சியர் பவானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மக்கள் தொடர்பு திட்ட முகாமையொட்டி அமைக்கப்பட்டிருந்த பல்துறை பணி விளக்க கண்காட்சியில், செய்தி- மக்கள் தொடர் புத்துறை, சுகாதாரம், ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சித் திட்டம், வேளாண்மை, தோட்டக் கலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள், நல உதவிகள் குறித்து பொது மக்களுக்கு அதிகாரிகள் விளக்கினர்.

SCROLL FOR NEXT