கோடைகாலம் என்பதால் மெரினா கடற்கரையில் தினமும் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், அடிப்படை வசதிகள் இல் லாததால் அவர்கள் அவதிப்படு கின்றனர்
பொதுவாக கோடைகாலம் தொடங்கிவிட்டால் சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும் மக்கள் குடும்பத்துடன் படையெ டுத்து வருவர். மாலை நேரத்தில் கடற்கரை மணற்பரப்பையே மறைக்கும் அளவுக்கு கூட்டம் அலைமோதும். கடந்த 2 நாட்களாக வெயில் சற்று தணிந்து, வானம் மேக மூட்டத்துடன் காணப் படுவதால் பகல் நேரத்திலும் குடும் பத்துடன் கடற்கரைக்கு வரு கின்றனர்.
கோடையில் நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் மெரினா வுக்கு வந்து செல்வதாக மாநக ராட்சி தரப்பில் தெரிவிக்கப்படு கிறது. ஆனால், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. மெரினா கடற்கரையில் 4 இடங் களில் மாநகராட்சி பொதுக் கழிப் பிடங்கள் உள்ளன. அவை முறை யாக பராமரிக்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் குறை கூறுகின்றனர்.
குடும்பத்துடன் வந்திருந்த மேனகா கூறும்போது, “இவ் வளவு மக்கள் கூடும் இடத்தில் 4 கழிப்பிடங்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் உள்ள 4 கழிப்பறைகளில் 2 மூடியே உள்ளன. ஒரு அறை யில் தாழ்ப்பாள் உடைந்து கிடக்கிறது. இதனால் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்’’ என்றார்.
மெரினாவில் சராசரியாக தின மும் 10 டன் குப்பை சேருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இது 15 டன்னாக அதிகரிக்கும். போதிய குப்பைத் தொட்டிகள் இல்லாததால், கடற்கரை முழு வதும் குப்பைகள் பரவிக் கிடக் கின்றன என்று பொதுமக்கள் கூறு கின்றனர். ‘‘குப்பைத் தொட்டிகள் எங்கு இருக்கின்றன என்றே தெரியவில்லை. ஒன்றிரண்டு இருந்தாலும் வெகு தூரத்தில் உள்ளன. எனவே, தவறு என்று தெரிந்தும் குப்பையை கடற்கரையிலேயே போடுகிறோம்’’ என்றார் பாலா என்பவர்.
200 குப்பைத் தொட்டிகள்
இதுகுறித்து மாநகராட்சி அதி காரியிடம் கேட்டபோது, ‘‘உட்புற சாலையில் தற்போது 16 குப்பைத் தொட்டிகள் உள்ளன. கடற்கரை யில் வைப்பதற்கு 200 குப்பைத் தொட்டிகள் ஆர்டர் செய்துள் ளோம். இன்னும் 2 வாரத்தில் கிடைத்துவிடும். கலங்கரை விளக் கம் முதல் உழைப்பாளர் சிலை வரை கடற்கரையை சுத்தம் செய்ய தினமும் 130 துப்புரவுத் தொழிலாளர்கள் 4 ஷிப்டுகளில் பணிபுரிகின்றனர்’’ என்றார்.
மெரினா பகுதி சுழல் அலைகள் உள்ள ஆபத்தான பகுதி என்ப தால் கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர் பாக எச்சரிக்கை பலகைகள் காவல்துறையால் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. எனினும் பெரும்பாலான மக்கள் ஆபத்தை உணராமல் கடலில் குளிக்கின்றனர். இதனால், அலைகளில் இழுத்துச் செல்லப் பட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. நேற்று காலைகூட அண்ணாசதுக்கம் அருகே 60 வயது பெண்ணின் உடல் கரை ஒதுங்கியுள்ளது.
“மாலை நேரத்தில் கடற்கரை பகுதியில் போலீஸார் கூடுதலாக பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டால், கடலில் இறங்குபவர்களை தடுக்கலாம்’’ என்றார் மெரினா வுக்கு வந்திருந்த கோபாலன். மெரினா காவல் நிலைய போலீ ஸார் கூறும்போது, “ கூட்டம் அதிக மாக இருக்கும் மாலை நேரங் களில் மெரினா உட்புற சாலை யில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை முதல் குடிசை மாற்று வாரிய அலுவலகம் வரை ஒருவழிப் பாதையாக மாற்றப் பட்டுள்ளது. கோடைகால கூட்டத்தை சமாளிக்க, அருகில் உள்ள காவல் நிலையங்களில் இருந்து கூடுதலாக போலீஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெண் போலீஸார், கடலோர காவல்படை, குதிரைப் படை யினரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்’’ என்றனர்.