தமிழகம்

நீதிபதி பணியிடங்களை நிரப்புவதில் வழக்கறிஞர்கள் தடையாக உள்ளனர்: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

செய்திப்பிரிவு

நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பு வதில் வழக்கறிஞர்களின் செயல் கள் தடையாக உள்ளன என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த ஏ.ஆர்.குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது:

புதுச்சேரி காதி கிராமத் தொழில் வாரியத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றுகிறேன். எனது வேலை தொடர்பாக உயர் நீதிமன்றத் தில் 6 மனுக்கள் தாக்கல் செய்துள் ளேன்.

அந்த மனுக்களுக்கு பதில் அளிக்குமாறு எதிர்மனுதாரர் களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. ஆனால், தேதி குறிப்பிட்டு வழக்கை ஒத்தி வைக்கவில்லை. இதனால், குறிப் பிட்ட காலத்தில் வழக்கு விசாரணை பட்டியல் இடப்படவில்லை.

எந்த தேதியில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படும் என்பது முன்கூட்டியே தெரிய வேண்டும். இது மனுதாரரின் அடிப்படை உரிமையாகும். நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அது விசாரணைக்கு எடுத்துக் கொள் வதற்குள் வழக்கு தொடர்ந்த வர்கள் சில நேரங்களில் இறந்து விடுகின்றனர்.

ஒரு வழக்கை குறிப்பிட்ட நாட் களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என கால நிர்ணயம் ஏதும் இல்லை. வழக்கை நீண்ட காலத்துக்கு இழுத்தடித்த பிறகு ஒருவருக்கு நிவாரணம் வழங்கு வதால் எந்தப் பயனும் இல்லை.

உயர் நீதிமன்றத்தில் 5 லட்சம் வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. இதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவேண்டும். இல்லை யென்றால் நீதித்துறை மீதான நம் பிக்கையை மக்கள் இழந்து விடுவர். எனவே, உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கும் தேதியை பதிவு செய்யும் ‘ஏ’ பதிவேட்டை பராமரிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகி யோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்ததாவது:

மனுதாரர் விரைவான தீர்ப்பு கோருவதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், வழக்குகளின் எண்ணிக்கைகளும் நீதிபதிகளின் எண்ணிக்கைகளும் அந்த வேலையை முடிப்பதற்கு போதுமானதாக இல்லை.

நீதிமன்ற செயல்பாடுகளை மேம் படுத்துவதற்காக, சட்ட ஆணையத் தின் வழக்கு மேலாண்மை தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு அம்சங் கள் நீதிமன்ற நிர்வாகத்தால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. நீதிபதிகளின் எண்ணிக்கை என்பது மிகவும் அவசி யமானது. நீதிபதிகள் பணியிடங் களை நிரப்புவதில் வழக் கறிஞர்களின் செயல்கள் தடையாக உள்ளன.

இவ்வாறு கூறிய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT