நேபாளத்தில் நிலநடுக்கத்தில் சிக்கி இறந்தவர்களுக்கு இந்து முன்னணி இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நேபாளத்தில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்ற செய்தி கிடைத்த சில மணித் துளிகளில் பிரதமர் மோடி, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டார். அடுத்த 3 மணி நேரத்தில் நிவாரணப் பணிக்குத் தேவையான மருந்து மற்றும் உணவுப் பொருட்களுடன் நமது ராணுவம் நேபாளத்துக்கு புறப்பட்டு சென்றது பாராட்டத்தக்கது.
எதிர்பாராத இந்த இடர்பாட்டில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்து முன்னணி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.