புதுச்சேரியில் வீட்டுவசதி வாரிய அலுவலக அதிகாரிகளிடம் சிபிஐ திடீர் விசாரணை மேற்கொண்டது.
வீட்டுவசதி வாரியத்துக்காக ரூ.1 கோடி மதிப்பு நிலம் ரூ.5 கோடிக்கு வாங்கப்பட்டதாக புகார் எழுந்தது.
புகாரை அடுத்து கிருமாம்பாக்கத்தில் நிலம் வாங்கியது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டது. இது குறித்த தகவல்களையும், விவரங்களையும் சிபிஐ தீவிரமாக சேகரித்து வருகிறது.
ஆனால், நிலம் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததா என்பதை சிபிஐ இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.