தமிழகம்

4 வயது குழந்தைக்கு இதயத்தின் அருகில் இருந்த புற்றுநோய் கட்டி நீக்கம்: அரசு ஸ்டான்லி மருத்துவமனை சாதனை

செய்திப்பிரிவு

அரசு ஸ்டான்லி மருத்துவமனை யில் 4 வயது குழந்தையின் இதயத்தின் அருகில் இருந்த புற்றுநோய் கட்டியை டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

அரக்கோணத்தை சேர்ந்தவர் பழனி. தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்யா. இவர்களின் மகள் வர்ஷினி (4). மூச்சுத் திணற லால் பாதிக்கப்பட்டு வந்த குழந் தையை பெற்றோர், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் சேர்த்தனர். டாக்டர் கள் பரிசோதனை செய்து பார்த்த போது, குழந்தையின் நெஞ்சுப் பகுதியில் நுரையீரலுக்கு பின் புறம் இதயத்துக்கு மிகவும் அரு கில் கட்டி இருப்பது தெரிந்தது.

பரிசோதனையில் அது புற்றுநோய் கட்டி (நீயூரோ பிளாஸ் டிமா) என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தை கள் அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் ஆர்.செந்தில் நாதன் தலைமையில் மயக்க டாக்டர் நமச்சிவாயம், டாக்டர்கள் விவேக், பொன்னம்பலம், சித்ரா ஆகியோர் கொண்ட குழுவினர் குழந்தையின் நெஞ்சுப் பகுதி யில் சிறிய அளவில் 4 துளை களையிட்டு நவீன கருவியை உள்ளே செலுத்தி 3 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 6 செ.மீ. சுற்றளவு கொண்ட கட் டியை முழுவதுமாக வெற்றிகர மாக அகற்றினர்.

இந்த சிகிச்சைக்கு பிறகு குழந்தை நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

முதல் நிலை புற்றுநோய் கட்டி

இது தொடர்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன், டாக்டர்கள் நேற்று அளித்தபேட்டி:

அரசு மருத்துவமனைகளி லேயே முதல் முறையாக, இந்த மருத்துவமனையில் 4 வயது குழந்தைக்கு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டுள்ளது. குழந் தைக்கு புற்றுநோய் கட்டி முதல் நிலையில் இருந்தது. நுரை யீரலை புற்றுநோய் கட்டி அழுத்தி யதால், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மற்ற உடல் உறுப்புகளுக்கு பாதிப்பு இல்லாமல், கட்டியை முழுவது மாக அகற்றிவிட்டோம். தற்போது குழந்தை நன்றாக மூச்சு விடுகிறது. புற்றுநோய் கட்டி மீண்டும் வராமல் இருக்க, குழந்தைக்கு கீமோதெரப்பி மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் விரிவான மருத் துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ள இந்த அறுவை சிகிச்சையை தனி யார் மருத்துவமனையில் செய்வ தற்கு ரூ.3 லட்சம் வரை செலவாகும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

குழந்தையின் தாய் ரம்யா கூறும்போது, “என்னுடைய கண வர் கேன்டீனில் வேலை செய்து குடும்பத்தை நடத்துகிறார். தனி யார் மருத்துவமனையில் குழந் தைக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ.3 லட்சம் கேட்டார்கள். அந்த அளவுக்கு செலவு செய்ய எங்களால் முடியவில்லை. அரசு ஸ்டான்லி மருத்துவமனை டாக் டர்கள் என் குழந்தையின் புற்று நோய் கட்டியை அகற்றி உயிரை காப்பாற்றிவிட்டனர். டாக்டர் களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

SCROLL FOR NEXT