சினிமா பைனான்சியரிடம் இருந்து பெற்ற ரூ.35 லட்சம் கடன் தொகையை திருப்பிச் செலுத் தாத குற்றத்துக்காக முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அன்பரசு, அவரது மனைவி உட்பட 3 பேருக்கு தலா இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் மூத்த தலை வர்களில் ஒருவரான அன்பரசு, ராஜீவ்காந்தி நினைவு கல்வி அறக்கட்டளையின் அறங்காவல ராக உள்ளார். கடந்த 2002 ம் ஆண்டு சினிமா பைனான்சியர் முகன்சந்த் போத்ரா என்பவரிடமிருந்து அறக் கட்டளை வளர்ச்சிப் பணிக்காக அன்பரசு ரூ.35 லட்சம் கடன் வாங் கினார். ஆனால், அதைக் குறிப் பிட்ட தேதிக்குள் திருப்பிக் கொடுக்க வில்லை.
இதையடுத்து, முகன்சந்த் போத்ரா காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க அன்பரசு காசோலை வழங் கினார். ஆனால் ராஜீவ்காந்தி கல்வி அறக்கட்டளைக்கு சொந்த மான வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்தது.
இதையடுத்து, அன்பரசு, அவர் மனைவி கமலா, தொழில் அதிபர் மணி, பரமசிவம், சண்முக செல்வி உள்பட 8 பேர் மீது முகன்சந்த் போத்ரா காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை சென்னை ஜார்ஜ் டவுன் 8-ம் எண் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 2007 ம் ஆண்டு முதல் நடந்து வந்தது.
இந்நிலையில், நேற்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப் பட்டது. நீதிபதி கோதண்டராஜ் தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
மாற்றுமுறை ஆவணச் சட்டம் 138-ன் கீழ், காசோலை மோசடி செய்ததாக சுமத்தப் பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டுள்ளதால் முன்னாள் எம்.பி. அன்பரசுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இதேபோல், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அன்பரசு மனைவி கமலா, தொழில் அதிபர் மணி ஆகியோருக்கும் தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் படுகிறது.
மேலும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பரமசிவம், சண்முக செல்வி உள்பட 4 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர். அத்துடன், முன்னாள் எம்.பி. அன்பரசு, ராஜீவ் கல்வி அறக்கட்டளைக்காக வாங்கிய பணத்தை 9 சதவீத வட்டி யுடன் 2006 ம் ஆண்டு முதல் கணக் கிட்டு திருப்பிச் செலுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.