இதயத்தில் ஏற்படும் ரத்தக் குழாய் அடைப்புக்கு புதிய சிகிச்சை முறை அரசு மருத்துவ மனைகளில் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது.
இதயத்தில் ஏற்படும் ரத்தக் குழாய் அடைப்பை பைபாஸ் அறுவைச் சிகிச்சை, ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யாமல் சீராக்கு வதற்கான புதிய சிகிச்சை முறை தனியார் பங்களிப்புடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த புதிய சிகிச்சை முறை, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று தொடங்கப்படுகிறது.
இதுதொடர்பாக வாசோ மெடி டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்தவரும், புதிய சிகிச்சை முறையின் ஒருங் கிணைப்பாளருமான டாக்டர் எஸ்.ராமசாமி கூறியதாவது:
இதயத்தில் ஏற்படும் ரத்தக்குழாய் அடைப்பால், இதயத்துக்கு செல்லும் ரத்தம் ஓட்டம் தடைபடுகிறது. இதனால் நெஞ்சுவலி, இதயம் பலவீன மடைதல் மற்றும் மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்தின் ரத்தக் குழாய் அடைப்புக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி செய்வதே தீர்வாக இருந்தது. இந்நிலையில் இந்த புதிய சிகிச்சை முறையின் மூலம் ரூ.80 லட்சத்தில் வாங் கப்பட்ட நவீன கருவியின் (Enhanced External Counter Pulsation - E.E.C.P) மூலமாக கால்களில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி இதயத்தை நோக்கி ரத்தம் செலுத்தப்படும். தினமும் ஒரு மணி நேரம் வீதம் தொடர்ந்து 35 நாட்கள் இவ்வாறு சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம் ரத்தக்குழாய் அடைப்பை சுற்றி புதிதாக ரத்த நாளங்கள் உருவாகும். இந்த புதிய ரத்த நாளங்கள் மூலமாக இதயத்துக்கு சீராக ரத்தம் செல்லும். இதனால் நெஞ்சுவலி, இதய பலவீனம், மாரடைப்பு போன்ற அனைத்து பிரச்சினைகளும் தீரும். நோயாளி கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற வேண்டியதில்லை.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுமார் 600 நோயாளிகளுக்கு இந்த புதிய முறையில் சிகிச்சை அளிக்கப்ப ட்டுள்ளது. இரண்டாவதாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் இந்த புதிய சிகிச்சை முறையை தொடங்கு கிறோம். விரைவில் படிப்படியாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் புதிய சிகிச்சை முறை தொடங்கப் படும்.தனியார் மருத்துவமனையில் ரூ.1 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை, அரசு மருத்து வமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்படுகிறது.