சைதாப்பேட்டையில் கட்டுமான நிறுவன அதிபர் மீது சிறிய அள விலான வெடிகுண்டுகளை வீசிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சைதாப்பேட்டை பழைய மாம்பலம் சாலையைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (50). கட்டு மான நிறுவனம் நடத்தி வருகிறார். சைதாப்பேட்டை சேகர் நகர் கம்பர் தெருவில் அலொசியஸ் பேட் ரிக் (48) என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானப் பணி களை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த 5-ம் தேதி காலை 7.45 மணிக்கு கட்டுமானப் பணி நடக்கும் இடத்தை மேற்பார்வையிட வந்தார் ஜெகநாதன். அப்போது மர்ம நபர்கள் சிலர் ஜெகநாதன் மீது சிறிய அளவிலான வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றதாக சொல்லப்பட்டது. போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அதிக சத்தத்துடன் வெடிக்கக் கூடிய பட்டாசுகளை கொளுத்தி போட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர்’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜெக நாதன் கொடுத்த புகாரின்பேரில், குமரன்நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத் தினர். இன்ஸ்பெக்டர் கங்கேஸ் வரன் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, சிஐடி நகரைச் சேர்ந்த ஜெகன் என்ற ஜெகநாதன் (30), எம்ஜிஆர் நகர் வினோத் என்ற வினோத்குமார் (26) ஆகியோரை கடந்த 10-ம் தேதி கைது செய்தனர்.
தேனாம்பேட்டை தாமஸ் சாலை குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் சி.டி. மணி என்ற மணிகண்டனுக்கும் (32) கட்டுமான நிறுவன அதிபர் ஜெக நாதனுக்கும் நிலம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந் துள்ளது. இதையடுத்து மணியின் தூண்டுதலின்படியே ஜெகநாதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தொடர் புடைய நெசப்பாக்கம் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்த பால்ராஜ் (32) என்பவரை போலீஸார் தேடி வந்தனர். காசி தியேட்டர் எதிரில் உள்ள பாலத்தின் அருகில் மறைந் திருந்த பால்ராஜை நேற்று கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.