தமிழகம்

பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அப்போலோ மருத்துவமனையில் நவீன சிகிச்சை

செய்திப்பிரிவு

புதுச்சேரியை சேர்ந்த சிறுமி சவுபஸ்ரீ (12). பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் பல மருத்துவமனைகளால் கைவிடப்பட்ட பிறகு, சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். டாக்டர்கள் சவுபஸ்ரீயை பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு பன்றிக்காய்ச்சல் கடுமையாக இருப்பதும், நுரையீரல் பாதிக்கப் பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிஎம்ஓ (இதயம், நுரையீரல் பணியை செய்யும்) இயந்திரத்தை கொண்டு சிறுமியின் நுரையீரல் செயல்பாட்டை நிறுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் பன்றிக்காய்ச்சலும் குணப்படுத்தப்பட்டது.

இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் செயலாக்க துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி, அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவின் முதுநிலை சிறப்பு டாக்டர் இந்திரா ஜெயகுமார் ஆகியோர் செய்தி யாளர்களிடம் கூறும்போது, “சென்னையில் அப்போலோ மருத்துவமனையில்தான் குழந்தைகளுக்கு சிஎம்ஓ சிகிச்சை வழங்கப்படுகிறது. பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, சிஎம்ஓ இயந்திரத்தின் மூலம் முதல் முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

SCROLL FOR NEXT