தமிழகம்

ஜெயலலிதாவுக்காக தயாராகிறது முதல்வர் அறை

செய்திப்பிரிவு

ஜெயலலிதாவுக்காக சட்டப் பேரவை கட்டிடத்தில் உள்ள முதல்வர் அறை தயாராகி வருகிறது.

தமிழக முதல்வராக பொறுப் பேற்ற ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வருக்கான அறையை பயன்படுத்தவே இல்லை. பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற வகையில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறை யையே பயன்படுத்தி வருகிறார்.

வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்பதில் இருந்த சட்டப்பூர்வ தடை நீங்கியது. இதன் முழு விவரம் ->ஜெயலலிதா முதல்வராவதில் சட்டப்பூர்வ தடை நீங்கியது

தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டிருப் பதால், அவர் மீண்டும் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதையடுத்து முன்பு அவர் பயன்படுத்திய அறை தற்போது தயாராகி வருகிறது. மராமத்துப் பணிகள் ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அறையை சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அங்கு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த அறைக்கு செல்வதற்கான மின்தூக்கியும் (லிப்ட்) சோதனை செய்யப் பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் மகிழ்ச்சி

சொத்துக் குவிப்பு வழக்கில் காலை 11 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக் கப்பட்டிருந்ததால், முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச் சர்கள் கோட்டைக்கு வர வில்லை. ஆனால், துறை செய லாளர்கள், அதிகாரிகள், அலு வலர்கள் அனைவரும் பணிக்கு வந்திருந்தனர். அதே நேரத்தில் மனு கொடுக்க வருபவர்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது.

10.30 மணிக்குப் பிறகு தலைமைச் செயலக வளாகத் தில் பரபரப்பு தொற்றிக்கொண் டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மற்றும் தலைமைச் செயலக ஊழியர் கள் தீர்ப்பை அறிய ஆவலாக காத்திருந்தனர். 11 மணிக்கு ஜெயலலிதா விடுதலை செய்யப் பட்டதை அறிந்ததும் தலைமைச் செயலக ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த சிலர், கோட்டை முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் மற்றும் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அரசு வாகன ஓட்டுநர்கள் சங்கத் தினர். சட்டப்பேரவை கட்டிட வளா கத்தில் இருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். பத்திரிகையாளர்கள் அறையில் இருந்த செய்தியாளர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதுதவிர பல்வேறு அரசுத் துறை ஊழியர்களும் அமைச்சர் கள் அலுவலகத்தில் பணியாற்று வோரும் இனிப்பு வழங்கி மகிழ்ச் சியை பகிர்ந்துகொண்டனர். தலைமைச் செயலக ஊழி யர்கள் சங்கம், தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலக நிருபர்கள் சங்கம் ஆகியவை முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.

          
SCROLL FOR NEXT