தமிழகம்

அரசுப் பள்ளிகளை பாதுகாக்க மாணவர் சங்கம் சைக்கிள் பயணம்

செய்திப்பிரிவு

அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி களை தரம் உயர்த்தி, பாதுகாக்க வேண்டும் என்று கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை யில் நேற்று சைக்கிள் பயணம் தொடங்கியுள்ளனர்.

மூடப்பட்டுள்ள அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளை திறக்க வேண்டும், அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி, மாணவர் சேர்க்கையை அதிக ரிக்க வேண்டும், கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய மாண வர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் பிரச்சார பயணம் நடைபெறுகிறது.

சென்னையில் மே 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடை பெறும் பயணத்தை கோயம் பேடு மாநகராட்சி துவக்கப் பள்ளி அருகே கல்வியாளர்கள் வே.வசந்தி தேவி, எஸ்.எஸ்.ராஜகோபாலன் ஆகியோர் நேற்று காலை தொடங்கி வைத்தனர். கே.கே.நகர், விருகம்பாக்கம் பகுதி வழி யாக இந்த பயணம் மேற்கொள்ளப் பட்டது. அடுத்த மூன்று நாட்களில் நுங்கம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படும்.

தொடக்கவிழா நிகழ்ச்சியில் வசந்திதேவி பேசும்போது, “ஆட்சி யாளர்களின் முழு ஆதரவோடு தனியார் பள்ளிகள் கல்வி உரிமைச் சட்டத்தை மீறி செயல்படுகின்றன. அரசு பள்ளிகளை அரசே அழிக்கிறது.

கல்வி உரிமைச்சட்ட விதிகளை தமிழகத்தில் உள்ள 90 சதவீத தனியார் பள்ளிகள் மீறுகின்றன” என்றார்.

விழிப்புணர்வு தேவை

இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜோ.ராஜ் மோகன் பேசும்போது, “தரமான ஆசிரியர்கள், பரந்த விளை யாட்டு மைதானங்கள் போன்ற விஷயங்களில் தனியார் பள்ளி களை விட அரசுப் பள்ளிகள் தரமானவை என்ற விழிப்புணர்வை பெற்றோர்களுக்கு இந்த பிரச்சாரத்தின் மூலம் ஏற்படுத்துகி றோம்.

ஏற்கெனவே திருவாரூர், தருமபுரி மாவட்டங்களில் சைக்கிள் பயணம் முடிவடைந் துள்ளது. திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் பல மாவட்டங்களில் இந்த பிரச்சாரப் பயணம் நடைபெறவுள்ளது’’ என்று அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT