ஆவடியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆதார் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் சிலருக்கு பதிவு எண் கொண்ட ரசீது வழங்கப்பட்டது. இதில் உள்ள எண்ணைக் கொண்டு ஆன்-லைன் மூலம் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம் என அதிகாரிகள் கூறினர்.
ஆனால், இந்த முகாமில் பங்கேற்ற பெரும்பாலானோ ருக்கு ரசீது வழங்கப்படவில்லை. இதனால் ஆதார் அட்டையை ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. தபால் மூலமும் வரவில்லை.
இதுகுறித்து, ஆவடி நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் ஆதார் அட்டை நிரந்தர முகா மில் சென்று விசாரித்தால் நக ராட்சி அதிகாரிகள் அதற்கும் எங் களுக்கும் சம்பந்தமில்லை எனக் கூறுகின்றனர்.
இப்பிரச்சினையைத் தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.