தமிழகம்

சத்தியமங்கலத்தில் புலி நகம் கடத்திய 3 பேர் கைது

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கேர்மாளம் பகுதியில் ஆசனூர் புலிகள் காப்பக இணை இயக்குநர் பத்மா உள்ளிட்ட வனக்காவலர்கள் கொண்ட குழு ரோந்து பணியில் ஈடுபட்டது.

சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே புலி நகங்களை கடத்த முயன்ற 3 பேரை பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், ஆசனூர் மாதேவன் (47), கெத்தேசாலை மகாதேவன் (25), சித்தன் (27) என்பது தெரியவந்தது. 8 புலி நகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

3 பேரும் சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

SCROLL FOR NEXT