தமிழகம்

கால்நடை மருத்துவப் படிப்புகள்: 11 ஆயிரம் பேர் விண்ணப்பம்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 6 கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் கடந்த 17-ம்தேதி காலை 10 மணி முதல் வழங்கப்படுகிறது. இதுவரை ஆன்லைன் மூலம் சுமார் 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் வரும் ஜூன் 4-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

SCROLL FOR NEXT