தமிழகம்

அரசுக்கு உலர் தீவனம் வழங்க விவசாயிகளுக்கு அழைப்பு: மே 15-க்குள் விலைப் பட்டியல் அளிக்கலாம்

செய்திப்பிரிவு

உலர் தீவன மையங்களில், கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை வழங்க விருப்ப முள்ள விவசாயிகள் வரும் 15-ம் தேதிக்குள் விலை பட்டியலை வழங்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில், கால் நடை பராமரிப்புத் துறை மூலம் சிறு, குறு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு மானிய விலையில் (கிலோ ரூ.2) உலர் தீவனம் (வைக்கோல்) வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக அய்யம் பேட்டை, மதுராந்தகம், சிட்லபாக்கம் ஆகிய கால்நடை மருந்தக அலுவலகங் களில் உலர் தீவன மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக, மேற்கூறிய மையங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட் டுள்ளது.

இதன்படி சிறு, குறு விவசாயி கள், கால்நடை வளர்ப்போர் நாள் ஒன்றுக்கு, ஒரு கால் நடைக்கு 3 கிலோ உலர் தீவன மும் அதிபட்சமாக 5 கால்நடை களுக்கு ஒருவார காலத்துக்கு தேவையான உலர் தீவனமும் பெற்றுகொள்ளலாம். குடும்ப அட்டை நகலினை வழங்கி, இத் திட்டத்தில் பயனாளிகளாக இணை யலாம். அதற்கென அடையாள அட்டை வழங்கப்படும்.

மேற்கூறிய 3 உலர் தீவன மையங்களுக்கு, உலர் தீவனம், மக்காச்சோளம் உலர்தட்டை வழங்க விவசாயிகளிடம் இருந்து விலை பட்டியல்கள் வரவேற்கப் படுகிறது. விருப்புமுள்ள விவ சாயிகள், உலர் தீவனம் கிலோ ஒன்றுக்கான விலையை நிர்ணயித்து (ஏற்றுக் கூலி மற்றும் இறக்குக் கூலி உட்பட) அதற்கான விண்ணப்பத்தை சீல் வைத்து, வரும் 15-ம் தேதிக்குள், மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை, ஆஸ்பிட்டல் ரோடு, காஞ்சிபுரம் 631502 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமோ அல்லது நேரிலோ வழங்கலாம். மேலும், விவரங்களுக்கு மண்டல இயக்கு நர் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநரை அணுக லாம் என்று அந்த செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT