அனைத்து வகையான உணவு வகைகளையும் ஒரே இடத்தில் உண்டு மகிழச் செய்யும் நோக் கத்துடன் 'கோடை உணவுத் திருவிழா' சென்னையில் இன்று தொடங்குகிறது.
இந்த கண்காட்சியை நடத்தும் பிராம்ப்ட் டிரேட் ஃபேர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் இ.உதயகுமார் இது குறித்து கூறியுள்ளதாவது:
சென்னை வர்த்தக மையத்தில் மே 15, 16, 17 ஆகிய நாட்களில் கோடை உணவுத் திருவிழா நடை பெறும். சென்னையில் முதன்முறை யாக இதுபோன்ற கண்காட்சி நடத்தப்படுகிறது. தென்னிந்திய, வட இந்திய உணவுகள், இயற்கை உணவுகள், தானிய வகை உணவு கள், பாரம்பரிய உணவுகள், சைவ- அசைவ உணவுகள், தந்தூரி-சைனீஸ் வகை உணவுகள் என 300-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இதில் இடம்பெறுகின்றன.
சுமார் 100 வகையான தோசை கள், 20 வகை இட்லிகள், 30 வகை புட்டு, இடியாப்பம் வகைகள், 50 வகையான கேக்குகள், 30 வகை யான குளிர்கால பானங்கள், 25 வகையான மீன் வறுவல், 10 வகையான ஐஸ்கிரீம்கள் உள்ளிட் டவை உணவுத் திருவிழாவில் உள்ள 75 அரங்குகளில் இடம்பெறும்.
பெரியவர்களுக்கு மட்டுமல்லா மல், குழந்தைகளுக்கும் இது பயனுள்ளதாக அமையும். குழந்தைகளுக்கான போட்டிகள், ஆடல்-பாடல் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 10.30 மணி முதல் இரவு 9 மணி வரை இக்கண்காட்சியை கண்டு, உணவு உண்டு மகிழலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.