தமிழகம்

ஊட்டச்சத்து பாடத்தில் ஆட்டோ ஓட்டுநர் மகள் மாநில அளவில் முதலிடம்

செய்திப்பிரிவு

பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஊட்டச்சத்து மற்றும் உணவூட்டல் இயல் பாடத்தில் 200-க்கு 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார் பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம். மணிகண்டேஸ்வரி.

பாளையங்கோட்டை மேலகுல வணிகர்புரத்தைச் சேர்ந்தவர் மாணவி மணிகண்டேஸ்வரி. தந்தை பி. முருகன் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். தாயார் புற்றுநோயால் இறந்துவிட்டார்.

ஆட்டோ ஓட்டுவதில் கிடைக்கும் வருமானத்தில் தனது பிள்ளைகள் 4 பேரையும் முருகன் படிக்க வைக்கிறார்.

ஏழ்மையான சூழலிலும் படிப்பை கைவிடாமல் மாநில அளவில் சாதனை புரிந்திருப்பது குறித்து மணிகண்டேஸ்வரி கூறிய தாவது: “தொடக்கத்தில் இந்த பாடத்தில் விருப்பம் இருக்க வில்லை. ஆனால், பள்ளி ஆசிரியைகள் அளித்த பயிற்சி யால் நாளடைவில் அந்த பாடத் தில் விருப்பம் ஏற்பட்டது.

வருங்காலத்தில் ஊட்டச் சத்து துறை நிபுணராக வேண்டும் என்பதே விருப்பம்” என்றார்.

SCROLL FOR NEXT