தமிழகம்

மாநகராட்சி வாட்ஸ்-அப் செயலியில் 44 சேவைகள்: 10 மாதங்களில் 1.86 லட்சம் பேர் பயன்

செய்திப்பிரிவு

சென்னை: வாட்​ஸ்​-அப் செயலி​யில் வழங்​கப்​படும் 44 வித​மான சேவை​களை இது​வரை 1.86 லட்​சம் பேர் பெற்று பயன் அடைந்​திருப்​ப​தாக சென்னை மாநகராட்சி தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக பெருநகர சென்னை மாநக​ராட்சி நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: பெருநகர சென்னை மாநக​ராட்​சி​யின் சார்​பில் வழங்​கப்​படும் அத்​தி​யா​வசிய சேவை​களை பொது​மக்​கள் எளி​தில் பெறு​வதற்கு ஏது​வாக கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி வாட்​ஸ்​-அப் செயலி சேவை புதி​தாக அறி​முகப்​படுத்​தப்​பட்​டது.

அதன்​படி, பொது​மக்​கள் மாநக​ராட்​சி​யின் 94450 61913 என்ற வாட்​ஸ்​அப் எண்​ணுக்கு Hi அல்​லது வணக்​கம் என்ற குறுஞ்​செய்தி அனுப்பி தமிழ், ஆங்​கிலம் உள்பட 12-க்​கும் மேற்​பட்ட மொழிகளில் 44 வகை​யான சேவை​களை எளி​தில் பெறலாம்.

இந்த வாட்​ஸ்​அப் செயலி மூலம் சொத்து வரி, தொழில் வரி, வணிக வரி, வணிக வளாக வாடகை, குடிநீர் மற்​றும் கழி​வுநீர் கட்​ட​ணங்​கள் செலுத்​துதல், வணிக உரிமம் மற்​றும் விளம்​பரப் பேனர்​கள் உரிமம், முதல்​வர் படைப்​பகம், மெரினா நீச்​சல் குளம், சமூகக் கூடம், ரிப்​பன் கட்​டிடத்​தில் மரபு நடைபயணம், வீடு​தோறும் தேவையற்ற சோபா மற்​றும் மெத்தை கழி​வு​கள் பெறு​தல், கட்​டிடம் மற்​றும் கட்​டு​மானக் கழி​வு​கள் உள்​ளிட்ட சேவை​களுக்​கான முன்​ப​திவு​கள், கட்​டிட வரைபடத்​துக்​கான நகர திட்​ட​மிடல், பிறப்​பு-இறப்​புச் சான்​றிதழ் பதி​விறக்​கம் செய்​தல், குழந்​தை​யின் பெயர் சேர்த்​தல், புகார் தெரி​வித்​தல் மற்​றும் தகவல் சேவை​கள் உள்​ளிட்ட சேவை​கள் வழங்​கப்​படு​கின்​றன.தடையற்ற சேவையை வழங்க, இந்த தளம் செயற்கை நுண்​ணறிவை (ஏஐ) நேரடிப் பணி​யாளர் உதவி​யுடன் ஒருங்​கிணைக்​கப்​பட்​டுள்​ளது.

இதன் வாயி​லாக சிக்​கலான கோரிக்​கைகள் விரை​வான தீர்​வுக்​காக சம்​பந்​தப்​பட்ட துறை​களுக்கு அனுப்​பப்​படு​கின்​றன. இந்த வாட்​ஸ்​- அப் செயலியை பொது​மக்​கள் 24 மணிநேர​மும் தொடர்பு கொள்​ளும் வசதி ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

இதன்​மூலம் காகிதமில்லா பயன்​பாட்​டை சாத்​தி​ய​மாக்​கு​வதோடு, மக்​களுக்கு தாமதமின்​றி​யும், எவ்​வித அலைச்​சலுமின்​றி​யும் எளி​தாக சேவை​களை பெற முடிகிறது.

இந்த வாட்​ஸ்​-அப் செயலி சேவை பொது​மக்​களிடம் பெரும் வரவேற்பை பெற்று ஒரு டிஜிட்​டல் சேவைத் தளமாக செயல்​பட்​டு, 2.14 லட்​சத்​துக்கும் அதி​க​மான பயனர்​கள் பதிவு செய்து பயன்​படுத்தி வரு​கின்​றனர்.

இதில் 1.86 லட்​சத்​துக்​கும் அதி​க​மானோர் தங்​களுக்​குத் தேவை​யான சேவை​களை பெற்று பயனடைந்​துள்​ளனர். மேலும், ஒருங்​கிணைந்த கட்​ட​ணச் சேவை​கள் மூல​மாக ரூ.43.76 கோடி வரு​வாய் மாநக​ராட்​சிக்கு கிடைத்​துள்​ளது.

பொது​மக்​கள் மாநக​ராட்​சி​யின் இந்த வாட்​ஸ்​-அப் செயலியை பயன்​படுத்தி தேவை​யான சேவை​களை பெற்​றுக் கொள்​ளலாம்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT