சென்னை சாலிகிராமம் சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் இன்று காலையில் இரு சக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் பயணம் செய்தனர். அப்போது போலீஸ் தடுத்து நிறுத்தியதில் விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்துக்கு காவல்துறையே காரணம் என்று கூறிய பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
இந்நிலையில், வாகனத்தை தடுத்து நிறுத்திய போக்குவரத்து ஆய்வாளர் சற்குணம் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று போக்குவரத்து கூடுதல் ஆணையர் தாமரைக் கண்ணனுக்கு காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவு பிறப்பித்தார்.