சென்னை மாநகராட்சி பகுதி யில் நவீன கழிப்பறைகளை அமைக்க 348 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி பகுதியில் நவீன கழிப்பறை கள் அமைக்கும் பணி தொடர்பாக மாமன்ற கூட் டத்தில் உறுப்பினர் பி.வி.தமிழ்செல்வன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மேயர் சைதை துரைசாமி, “மாநகராட்சி எல்லைக்குள் நவீன கழிப்பறைகள் அமைக்க 348 இடங்கள் தேர்வு செய் யப்பட்டுள்ளன.
இதில் 216 இடங்களுக்கு பணி ஆணைகள் வழங்கப் பட்டு, 13 இடங்களில் பணிகள் முடிக் கப்பட்டுள்ளன. மற்ற இடங்களில் பணிகள் நடை பெற்று வருகின்றன” என்றார்.