விவசாய இடுபொருள் விற்பனையாளர்களுக்கான புத்தூட்ட பயிற்சி முகாமில், தரமான விதை என்று தரத்தை உறுதி செய்த பிறகே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் துறை சார்பில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகம் தலைமை வகித் தார். இந்த முகாமில், உரக் கட்டுப்பாடு சட்டத்தை விற் பனையாளர்கள் தெளிவாக அறிந்து கொள்ளும் வகை யில், வழிகாட்டி புத்தகம் ஒன்றையும் ஆட்சியர் சண் முகம் வெளியிட்டார். அதை, மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சீதாராமன் பெற்றுக் கொண்டார்.
‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக மானியத் தில் அரசு வழங்கும் யூரியா, விவசாயிகளை முறையாகச் சென்றடைகிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது’ என்று வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
பயிற்சி முகாமில் மாவட்ட விதை ஆய்வுத் துறை துணை இயக்குநர் ஸ்டான்லி பேசும்போது, ‘விவசாய இடுபொருள் விற்பனையாளர் கள், தாங்கள் கொள்முதல் செய்யும் விதைகளை அரசு விதை ஆய்வகத்தில் பரிசோதனைக்கு அளித்து, தரமான விதைகள் என்று உறுதி செய்த பிறகே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும். பரி சோதனை முடிவு வருவதற்கு முன்னதாகவே விதைகளை விற்பனை செய்யக் கூடாது’ என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து, விவசாயிகளுக்கு வேளாண் துறை அலு வலர்கள் பல்வேறு ஆலோச னைகளைக் கூறினர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழி யர்கள், தனியார் விவசாய இடுபொருள் விற்பனை யாளர்கள் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.