டி.பி.சத்திரத்தில் பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளைய டிக்க முயன்ற இரண்டு பெண் கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அமைந்தகரை அருகே டி.பி.சத்திரம் கஜபதி தெருவில் வசிப்பவர் மதினா(55). இவர் தனியாக வசித்து வருகிறார். கொளத்தூர் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த ஜெனிபர்(27), அவரது தங்கை மோனிகா(22) ஆகியோர் மதினாவுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள். மதினா தனியாக இருப்பதை அறிந்த ஜெனிபரும், மோனிகாவும் அவரிடம் கொள்ளையடிக்க திட்டமிட்டனர். நேற்று முன் தினம் இரவில் மதினாவின் வீட்டுக்கு வந்த ஜெனிபரும், மோனிகாவும் அவரை கத் தியை காட்டி மிரட்டி பணம், நகைகளை கேட்டனர். அப் போது மதினா அபயக்குரல் எழுப்பவே அருகே இருந்த வர்கள் விரைந்து வந்து ஜெனிபரையும், மோனிகாவை யும் பிடித்து டி.பி.சத்திரம் போலீஸில் ஒப்படைத்தனர்.
வீட்டு செலவுக்கு பணமில் லாததால் கொள்ளையடிக்க வந்ததாக இருவரும் தெரிவித் துள்ளனர். போலீஸார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.