தமிழகம்

மண்ணிவாக்கம் ஊராட்சி அதிமுக கவுன்சிலர் கொலை

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம், ஓட்டே ரியை அடுத்த மண்ணி வாக்கம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த அதிமுக ஊராட்சி கவுன்சிலரை, மர்ம கும்பல் வழிமறித்து வெட்டிக் கொன்றது.

ஓட்டேரியை அடுத்த மண்ணிவாக்கம் விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் (55). இவர், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், மண்ணிவாக்கம் ஊராட்சி 12-வது வார்டு கவுன்சிலராகவும், அதேபகுதியின் அதிமுக கிளைச் செயலாளராகவும் இருந்தார்.

இந்த நிலையில், மண்ணி வாக்கம் பகுதியில் உள்ள ஏரியை ஆழப்படுத்தும் பணிகளை நேற்று காலை பார்வையிட்டுவிட்டு பைக்கில் கிருஷ்ணராஜ் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

விவேகானந்தா நகர் அருகே மர்ம கும்பல் அவரை வழி மறித்து அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிவிட்டது.

தகவலறிந்த ஓட்டேரி போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து உடலை எடுத்து செங்கல் பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப் பிவைத்தனர்.

கொலை செய்யப்பட்ட கிருஷ்ணராஜ், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகவும், அப்பகுதியில் சிறு,சிறு தகராறுக ளுக்கு பஞ்சாயத்து பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

கிருஷ்ணராஜுக்கு மனைவி இந்துமதி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

SCROLL FOR NEXT