தமிழகம்

காற்றாலை மின் உற்பத்தி அளவை முன்கூட்டியே கணிக்கும் மையம்: சென்னையில் தொடக்கம்

செய்திப்பிரிவு

காற்றாலை மின் உற்பத்தி அளவை முன்கூட்டியே கணிக்கும் சேவை மையம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நெல்லை மாவட்டம் கயத்தாறு, குமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி, கோவை மாவட்டம் உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் 12,000 காற்றா லைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப் பட்டு வருகிறது.

ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை இந்த காற்றாலைகளில் இருந்து அதிகளவில் மின்சாரம் கிடைக்கும். அவ்வாறு கிடைக்கும் மின்சாரத்தின் முழு அளவையும் பயன்படுத்த ஏதுவாக மின் உற்பத்தியை முன்கூட்டியே கணிக்கும் மையம் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள தேசிய காற்றாலை மின்சக்தி நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

தேசிய காற்றாலை மின்சக்தி நிறுவனம், ஸ்பெயின் நாட்டின் கோர்டெக்ஸ் நிறு வனமும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த மையத்தை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கக் கூடிய எரிசக்தித் துறை இணைச் செயலர் வர்ஷா ஜோஷி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து இந்திய காற்றாலைகள் சங்கத்தின் தலைவர் கே.கஸ்தூரிரங் கையன் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் காற்றாலைகளின் மொத்த மின் உற்பத்தி நிறுவு திறன் 7,480 மெகாவாட். இதில் அதிக காற்று வீசும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதங்களில் மட்டும் 4,300 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், கடந்த 2013-14-ம் ஆண்டுகளில் காற்றாலை மின் உற்பத்தியில் முழு அளவை பயன்படுத்த முடியவில்லை. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

தற்போது காற்றாலை மின் உற்பத்தியை முன் கூட்டியே கணிக் கும் முன்னறிவிப்பு மையம் ஏற்படுத்தப் பட்டுள்ளதால், காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் முழுமை யாக பயன்படுத்தப்படும்.

மேலும் பிற மாநிலங்களில் இருந்து அதிகவிலைக்கு மின்சாரம் வாங்கப் படுவதும் தவிர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து தேசிய காற்று சக்தி நிறுவன கூடுதல் இயக்குநர் கே.பூபதி கூறியதாவது:

சோதனை முயற்சியாக தமிழகத்தில் உள்ள 134 காற்றாலை நிலையங்களில் கயத்தாறு பகுதியில் ஒரு நிலையம் மற்றும் உடுமலைப் பேட்டையில் உள்ள மூன்று நிலையங்கள் என 4 நிலை யங்களில் இந்த முன்னறிவிப்பு கணிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் படிப்படியாக அனைத்து நிலையங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.

இதன்மூலம் காற்றாலைகளில் எந் தெந்த பகுதிகளில் இருந்து அடுத்த சில தினங்களில் எவ்வளவு மின்சாரம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள் ளலாம். எனினும் காற்று வீசும் வேகம் உள்ளிட்டவற்றால் அவ்வபோது மின் உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்கள் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பதிவேற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT