காவிரியின் குறுக்கே மேகே தாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுத்து நிறுத்தக் கோரி, காவிரி டெல்டா விவசாயிகள் வரும் ஜூன் 6-ம் தேதி குடியரசுத் தலை வரை நேரில் சந்தித்து முறையிடுகி ன்றனர்.
இதுகுறித்து, அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கி ணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டும் பணிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக கர்நாடக முதல்வரும், சட்டத் துறை அமைச்சரும் தெரிவித்துள் ளனர். இதுவரை மத்திய அரசு மறுக்கவில்லை. எனவே, உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண் டும்.
காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தக் கோரியும், காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டுக் குழுவை அமைக்காமல் காலங்கடத்தி வரும் மத்திய அரசுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கக் கோரியும் குடியரசுத் தலைவரிடம் முறையிட முடிவு செய்துள்ளோம்.
இதற்காக, வரும் ஜூன் 6-ம் தேதி குடியரசுத் தலைவரைச் சந்திக்க அனுமதி பெற்றுள் ளோம்.
பருவம் தவறிப் பெய்யும் மழையால் எள், உளுந்து, பருத்தி மற்றும் கோடை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் நெருக்கடியான சூழலுக்குத் தள்ளப்பட்டுள் ளனர்.
நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்து சென்னையில் வரும் 26-ம் தேதி நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டம், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை களைக் கருத்தில்கொண்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வேறொரு தேதியில் இந்தப் போராட்டம் நடைபெறும்.
மத்திய அரசு விவசாயக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 4-லிருந்து 11 சதவீதமாக உயர்த் தியுள்ளதை திரும்பப் பெறவேண் டும்.
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடனுக்கு 17.75 சதவீத வட்டி விதித்து, ஜப்தி நடவடிக்கைகளில் ஈடுபட் டுள்ளதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.