தமிழகம்

கவிஞர் நீலமணிக்கு கவிக்கோ விருது: விழாவில் 2 நூல்கள் வெளியீடு

செய்திப்பிரிவு

கவிஞர் நீலமணிக்கு கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை சார்பில் சென்னையில் நேற்று கவிக்கோ விருது வழங்கப்பட் டது.

கவிஞர் அப்துல் ரகுமானின் கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கவிஞர்களுக்கு கவிக்கோ விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டுக்கான கவிக்கோ விருது வழங்கும் விழா மற்றும் அப்துல் ரகுமான் எழுதிய ‘இது சிறகுகளின் காலம்’, ‘கவிதை ஓர் ஆராதனை’ ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னை சிஐடி காலனியில் நேற்று நடந் தது.

விருது, சான்றிதழ்

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், கவிஞர் நீலமணிக்கு கவிக்கோ விருதையும் அதற்கான சான்றிதழையும் வழங்கினார்.

மேலும் அப்துல் ரகுமானின் நூல்களை அவர் வெளியிட அதனை பாபநாசம் ஆர்.டி.பி.கல்லூரியின் தாளாளர் எம்.ஏ.தாவூத் பாட்சா பெற்றுக்கொண்டார்.

இந்த நூல்கள் குறித்து முனைவர் பர்வீன் சுல்தானா திறனாய்வுரை வழங்கினார்.

SCROLL FOR NEXT