திமுகவை சேர்ந்த மதுரை மத்திய தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் சோ.பால்ராஜ் காலமானார்.
மதுரை மத்திய சட்டப் பேரவை தொகுதியில் திமுக சார்பில் 1989-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சோ.பால்ராஜ்(83). இவர் 2001-ல் மீண்டும் போட்டியிட்டு 147 வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். திமுகவில் மாநில தொமுச பேரவை துணைத் தலைவராக இருந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் நேற்று காலை காலமானார். இவரது இறுதி ஊர்வலம் மதுரை சுப்பிரமணியபுரம் 2-வது பிரதான சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து இன்று மாலை 5 மணியளவில் தொடங்குகிறது. பால்ராஜுக்கு மனைவி ஆனந்தவள்ளி, மகன் கண்ணதாசன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கண்ணதாசன் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். பால்ராஜ் உடலுக்கு திமுக நிர்வாகிகள் பலர் அஞ்சலி செலுத்தினர்.