தமிழகம்

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் முடி சேகரிப்பு உரிமம் ரூ.2.51 கோடிக்கு ஏலம்: உண்டியல் காணிக்கை ரூ.45.76 லட்சம்

செய்திப்பிரிவு

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கை யாக செலுத்தும் முடிகளை ஓராண் டுக்கு சேகரிப்பதற்கான உரிமம் 2.51 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் முடிகளை சேகரிக்கும் உரிமத்தை ஆண்டு தோறும் ஏலம் விடுவது வழக்கம். அந்த வகையில், கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலு வலர் புகழேந்தி முன்னிலையில் நேற்று ஏலம் நடைபெற்றது.

இதில், பங்கேற்ற சென்னை-ராஜ் ஹேர் இண்டர்நேஷ்னல் பிரைவேட் நிறுவனத்தார், 2.51 கோடி ரூபாய்க்கு, ஏலம் கேட்டு உரிமத்தை பெற்றனர். இதுகடந்த ஆண்டு விடப்பட்ட ஏல தொகை யை விட 25 லட்சம் ரூபாய் அதிகம்.

அதேபோல், கோயில் பிரசா தத்தை விற்பனை செய்வதற்கான உரிமத்தை, திருச்செந்தூரைச் சேர்ந்த ராமன் என்பவர் ரூ.1.44 கோடிக்கு ஏலம் எடுத்தார். ஏலத்தின் போது, அசம்பாவிதங்கள் ஏதும் நிகழா மல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

உண்டியல் காணிக்கை

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் உண்டியலில், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை கோயில் நிர்வாகம் மாதம் ஒரு முறை அல்லது இரு முறை எண்ணுவது வழக்கம்.

அந்த வகையில், நேற்று முன்தினம் காலை முதல், இரவு வரை காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இப்பணியில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர்.

கண்காணிப்பு கேமரா சகிதம் நடந்த இந்த காணிக்கை எண்ணும் பணியின் முடிவில், 45,75,869 ரூபாய் மற்றும் 340 கிராம் தங்கம், 2.705 கிலோ வெள்ளி ஆகியவை பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT