தமிழகம்

சிப்காட் வளாகத்தில் சிறு குறு நிறுவனங்களுக்கு நீண்ட கால குத்தகையில் இடம்: ஊரக தொழில் துறை அமைச்சர் ப.மோகன் தகவல்

செய்திப்பிரிவு

சிப்காட் தொழில் வளாகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் நிலம் ஒதுக்கப்படும் என்று ஊரக தொழில் துறை அமைச்சர் ப.மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி தொழிற் பேட்டையில் சிட்கோ நிறு வனத்தின் ‘ டான்சிட்கோ சார்ட்டர் 2023’ என்ற வழிகாட்டி பதிவேட்டை ஊரக தொழில்துறை அமைச்சர் ப.மோகன் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:

சிட்கோ நிறுவனம் இதுவரை 101 மேம்படுத்தப்பட்ட தொழிற் பேட்டைகளில் 6,993 தொழில் மனைகள், 450 தொழிற்கூடங்களை உருவாக்கியுள்ளது.

அதில் 10,997 இடங்கள் ஒதுக்கப்பட்டு தொழில் நிறுவனங்கள் நிறுவப் பட்டுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த அரசால் 25 புதிய தொழிற்பேட்டைகள் அறி விக்கப்பட்டு 12 தொழிற் பேட்டைகள் நிறுவப்பட்டுள்ளன. 13 தொழிற் பேட்டைகளை உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறது.

2,000 ஏக்கர் நிலப்பரப்பில் நிலவங்கி உருவாக்கும் அறிவிப் பின்படி, 1018 ஏக்கர் நிலங்கள் 17 இடங்களில் கண்டறியப்பட்டு தொழிற்பேட்டை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதுமட்டுமின்றி 23 மாவட்டங்களில் 16 ஆயிரம் ஏக்கர் அரசு நிலங்கள் கண்டறியப் பட்டுள்ளன. சிப்காட் தொழில் வளாகத்தில் 20 சதவீத நிலங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நீண்டகால 30 ஆண்டு குத்தகை அடிப்படையில் ஒதுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT