தமிழகம்

மாணவர் விசா தினம்: அமெரிக்க துணை தூதரகத்தில் 1,000 விசாக்கள் பதிவு

செய்திப்பிரிவு

மாணவர் விசா தினத்தையொட்டி சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் 1,000 மாணவர் விசாக்கள் பதிவு செய்யப்பட்டன.

சென்னையிலுள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான 1,000 விசாக்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பதற்கு ஏதுவாக வருடத்தில் ஒரு நாள் மாணவர் விசா தின நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அந்த நிகழ்ச்சி சென்னையிலுள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் இன்று ( நேற்று) நடந்தது. அந்த நிகழ்வில் அமெரிக்காவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை சார்ந்த பிரதிநிதிகள், இந்திய மாணவர்களுடன் கலந்துரையாடல் செய்தனர். இந்த நிகழ்ச்சியின்போது உயர்படிப்புக்காக 1000 மாணவர் விசாக்கள் பதிவு செய்யப்பட்டன.

          
SCROLL FOR NEXT