பெற்றோர் இல்லாத நிலையில், அத்தையின் முதியோர் உதவித் தொகையில் அரசு பள்ளியில் படித்த மாணவி, பிளஸ் 2-வில் 1124 மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தற்போது பொறியியல் படிக்க ஆசைப்படும் மாணவி அதற்கு உதவி கிடைக்காத நிலையில் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கோட்டை பெருமாள் கோயில் வீதியைச் சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வி. இவரது தம்பி அனந்தஈஸ்வரன் - தங்கம் ஆகியோரின் மகள் தனலட்சுமி (17). இவர் பிறக்கும்போதே, தாயார் மஞ்சள்காமாலை நோய் தாக்கி இறந்தார். சில மாதம் கழித்து அவரது தந்தையும் காலமானார்.
இதனால், அத்தை செந்தமிழ்ச் செல்வி, தனலட்சுமியை குழந்தை யிலிருந்தே வளர்த்து வருகிறார். கணவரை இழந்த இவர், அரசின் முதியோர் உதவித் தொகை மூலம் தனலட்சுமியை படிக்க வைத்த தோடு, தனது 85 வயதான தந்தை யையும் கவனித்து வருகிறார்.
பெற்றோர் இல்லாத குறை யின்றி வளர்ந்த தனலட்சுமி, திருப்பு வனம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 485 மதிப்பெண் எடுத்து பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்தார். தற்போது, பிளஸ் 2-வில் 1124 மதிப் பெண் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். அவர் எடுத்த மதிப்பெண்கள் விவரம்: தமிழ் 193, ஆங்கிலம் 171, இயற்பியல் 192, வேதியியல் 183, கணினி அறிவியல் 190, கணிதம் 195. தனலட்சுமி பொறியியல் கட்-ஆப் மதிப் பெண் 191.25 பெற்றிருந் தாலும் உயர் கல்வி படிக்க போதிய வசதியில் லாமல் தவித்து வருகிறார்.
இதுகுறித்து அவரது அத்தை கூறும்போது, ‘தனலட்சுமி பொறி யியல் படிப்பு படிக்க ஆசைப்படுகி றார். அரசு பொறியி யல் கல்லூரிகளில் கண்டிப்பாக இடம் கிடைக் கும் என ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால், விண்ணப்பம் வாங்கவே கடன் வாங்கும் சூழல் உள்ளது. முதியோர் உதவித் தொகையை நம்பி வாழும் நான், எப்படி அவ்வ ளவு பணம் செலவழித்து அவளை ஆளாக்கப் போகிறேனோ தெரிய வில்லை என்றார் கண்ணீர் மல்க.
மாணவி தனலட்சுமி கூறும் போது, எனது அத்தையும், ஆசிரியர்களும் கொடுத்த ஊக்கமே முதல் மதிப்பெண் எடுக்க வைத் தது. மாவட்ட அளவில் முதலிடம் வருவேன் என எதிர்பார்த்தேன். பள்ளி அளவில் முதலிடம் கிடைத் தது. ஏரோ நாட்டிக்கல் படிக்க ஆசை. அதற்கு அதிகம் செலவு ஆகும் என்பதால் இசிஇ படிக்க நினைக்கிறேன். நல்ல வேலைக்கு போய் என்னைப் போல சிரமப்படு பவர்களுக்கு உதவி செய்ய வேண் டும் என்பது தான் எனது ஆசை என்றார். உயர் கல்வி படிக்க வழியின்றி ஏங்கும் இவருக்கு உதவி செய்ய விரும்புவோர் 9943118209 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.