தமிழகம்

32 மாவட்டங்களுக்கும் மத்திய அமைச்சர்கள் வருகை: பாஜக தலைவர் தமிழிசை தகவல்

செய்திப்பிரிவு

தமிழக மக்களை சந்தித்து குறைகள் கேட்பதற்காக 32 மாவட்டங்களுக்கும் மத்திய அமைச்சர்கள் வரும் 9-ம் தேதி வரவிருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகள், பிரச்சினைகளைக் கேட்கவும், மக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவை பலப்படுத்தவும் தமிழகத்தின் 32 மாவட்டங்களுக்கும் மத்திய அமைச்சர்கள், 3 மாநில பாஜக முதல்வர்கள் வரும் 9-ம் தேதி வரவுள்ளனர்.

மத்திய அமைச்சர்கள் வரும் மாவட்டங்களில் மக்கள் சந்திப்புக் கூட்டங்கள் நடைபெறும். இதற்கு ‘மக்களோடு மத்திய அரசு’ என்று பெயர் சூட்டியுள்ளோம்.

மத்திய அமைச்சர்களிடம் பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம். மனுக்கள் அளிக்க லாம். அந்தந்த மாவட்டங்களில் உள்ள விவசாய சங்கங்கள், தொழில் அமைப்புகள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் அமைச்சர்களை சந்தித்து, வளர்ச்சிக்கான ஆலோசனைகள், திட்டங்களை தெரிவிக்கலாம்.

பாஜக நிர்வாகிகள், தொண்டர் களையும் மத்திய அமைச்சர்கள் சந்திக்க உள்ளனர். இந்த வாய்ப்பை பாஜக தொண்டர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழிசை கூறி யுள்ளார்.

SCROLL FOR NEXT