வேகமாக பரவும் H1N1 நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று ஸ்டாலின் எழுதியுள்ள முகநூல் பதிவில், ''தமிழ்நாடு H1N1 மற்றும் டெங்கு போன்ற பல்வேறு தொற்று நோயின் மையபுள்ளியாக மாறி வருகிறது. தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மூளைக் காய்ச்சலால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 2,830 பாதிக்கப்பட்டுள்ளனர், 123 இறப்புகள் பதிவாகியுள்ளது .
என்சிபாலிட்டிஸ், ஜப்பனீஸ் என்சிபாலிட்டிஸ் என்று கூறப்படும் நோய்கள் கடுமையான மூளை வீக்கம் மற்றும் நரம்பியல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை உருவாக்கி பெரும்பாலாக குழந்தைகளை பாதிக்கிறது.
ஆனால், தமிழக அரசோ மாநிலம் பல்வேறு வகையான நோயினால் பாதிக்கப்பட்ட போதிலும், இந்த நோய்களை தடுக்க தேசிய அளவிலான திட்டங்களின் கீழ் மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட 49% நிதியை மட்டுமே பயன்படுத்தியுள்ளது.
மூளைக் காய்ச்சல் போன்ற நோய்களை கட்டுப்படுத்த தமிழக அரசு உடனடியாக மக்களின் சுகாதார வசதிகள், பாதுகாப்பான குடிநீர், ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட அனைத்தையும் மறுசீரமைத்து பாதுகாப்பான சுழலை மக்களுக்கு உருவாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.