வெவ்வேறு விபத்துகளில் சிக்கி 4 சிறார்கள் உட்பட 7 பேர் பலியாயினர்.
திருவள்ளூர் அருகே உள்ள அய்யத்தூர் கிராமத்தில் தனி யார் செங்கல் சூளை ஒன்று செயல் பட்டு வருகிறது. இது, வெள்ள வேடு அருகே உள்ள கொட்டியம் பாக்கத்தைச் சேர்ந்த பந்தா குட்டி என்பவருக்கு சொந்தமானதாகும். இங்கு, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பார்சார் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், மருதமலை உள்ளிட்ட தொழிலாளர்கள் கடந்த 5 மாதங்க ளாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கண்ணனின் மகன் அய்யனார் (9), மருதமலை யின் மகன் அய்யனார் (9) ஆகிய இருவரும் கோடை விடுமுறையில் செங்கல்சூளையில் தங்கியுள்ளனர். அப்பகுதியில் நேற்று விளையாடிக் கொண்டிருந்த இருவரும், மழை நீர் தேக்கி வைக்கப்பட்டிருந்த பள் ளத்தில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து, செவ்வாப் பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பள்ளத்தில் மூழ்கி பலி
திருநின்றவூர் எம்.ஜி.ஆர். நகர் 10-வது தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராமலிங்கத்தின் மகன்கள் ராகுல் (9), ஜெயக்குமார் (6). 3 மற்றும் முதல் வகுப்பு படித்து வந்தனர். நேற்று முன் தினம் ரேஷன் கடைக்குச் சென்ற இருவரும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புகாரின்பேரில் திருநின்றவூர் போலீ ஸார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று மதியம் பிரகாஷ் நகர் அருகே உள்ள வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கிடந்த மழை நீரில் இருவரும் சடலமாக மிதந்தனர். போலீஸார் வந்து உடல்களை கைப்பற்றி பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணை நடந்து வருகிறது.
சுவர் இடிந்து..
பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டை காந்தி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(21). அவரது கூரை வீட்டை புதுப்பிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. மண் சுவரை இடிக்கும் பணியில் நேற்று முன்தினம் இரவு அவர் ஈடுபட்டார். அப்போது எதிர் பாராதவிதமாக சுவர் இடிந்து மணிகண்டன் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
வேன்மோதி..
திருவள்ளூர் மாவட்டம், புழல், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரங்காராவ் (42). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர், செங்குன்றம் அருகே நல்லூர் ஜி.என்.டி. சாலையில் லாரி புக்கிங் அலுவலகம் நடத்தி வந்தார்.
இச்சூழலில், நேற்று அதிகாலை 4.45 மணியளவில், தனது நண் பரும் லாரி ஓட்டுநருமான கும்மிடிப் பூண்டியைச் சேர்ந்த பாலாஜியுடன் மோட்டார் சைக்கிளில், புழலில் இருந்து, நல்லூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். செங் குன்றம் அடுத்த பாடியநல்லூர் மேம்பாலம் அருகே சென்றபோது, அம்பத்தூரிலிருந்து கும்மிடிப் பூண்டி நோக்கிச் சென்று கொண் டிருந்த பால் வேனின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பால் வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரங்காராவும், பாலாஜி யும் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வேன் ஓட்டுநர் ராமலிங்கத்தை (32) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.