சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளின் வாகனங்களில் வரும் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில் ஆய்வு நடத்த வேண்டுமென ஆர்டிஓக்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பள்ளிக் குழந்தைகளின் பாது காப்பு கருதி, அவர்களை அழைத்து வர பயன்படுத்தப்படும் வாகனங் களின் நிலை குறுத்து ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படுகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரையில் சென்னையிலுள்ள 10 வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், குழுவினரால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
பள்ளி வாகனங்களை முறையாக ஆய்வு செய்து சான்று வழங்க தேவையான நடவடிக்கை மேற் கொள்ள வருவாய், காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.