கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக, திமுகவில் இருந்து கருப்பசாமி பாண்டியன், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோரை கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்து திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன், திருநெல்வேலி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் வீ. கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியுள்ளனர்.
அத்துடன், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் தி.மு.கழக உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறனர்" எனத் தெரிவித்துள்ளனர்.