தமிழகம்

திண்டிவனம் அருகே இடிதாக்கி தாய், மகள் உட்பட 3 பேர் பலி

செய்திப்பிரிவு

திண்டிவனத்தில் இன்று பலத்த மழை பெய்துகொண்டிருந்தது. அப்போது இடிதாக்கியதில் தாய் , மகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக வருவாய்துறை மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திண்டிவனம் அருகே கொங்கராம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். விவசாய கூலி தொழிலாளியான இவரது மனைவி கஸ்தூரி (51) மகள் சாந்த லட்சுமி(21) இருவரும் இன்று வயலிலிருந்து வீட்டிற்கு திரும்பிவந்து வீட்டிற்குள் நுழைந்தபோது இடி தாக்கியதில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே பலியானார்.

படுகாயமடைந்த சாந்தகுமாரி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக திண்டிவனம் வருவாய்த்துறையினரும், பெரியதச்சூர் போலீஸாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதே நேரத்தில் உளுந்தூர்பேட்டை அருகே மாரனோடை கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி என்பவர் மகன் பெர்த் ரெட்டியார் (60) இவர் இன்று தனது வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது இடிதாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை வருவாய்த்துறையினர் மற்றும் திருநாவலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT