தமிழகம்

திருப்பூர் திமுக பிரமுகர் குடும்பத்தினர் 3 பேர் படுகொலை: கொலையாளியைப் பிடிக்க 6 தனிப் படைகள்

செய்திப்பிரிவு

திருப்பூரில் திமுக பிரமுகர், மனைவி, மகனை படுகொலை செய்தது, அவரது வீட்டில் தண்ணீர் லாரியை இயக்குவதற்காக நிய மிக்கப்பட்ட ஓட்டுநர் என்பது தெரியவந்துள்ளது. அவரைப் பிடிக்க 6 தனிப் படைகள் அமைக் கப்பட்டுள்ளன.

திருப்பூர் 3-வது வார்டு செட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் திமுக கிளைச் செயலாளர் சிவ சுப்பிரமணியம்(55). இவரது மனைவி சாரதாம்பாள் (50). மகள் ஷோபனா (28). மகன் நவீந்திரன் (24). மகள் ஷோபனா நிறைமாத கர்ப்பிணி. இவரது கணவர் பிரபு, டெக்ஸ்டைல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

சிவசுப்பிரமணியம் தனது வீட்டு வளாகத்தில் உள்ள கிணற்று நீரை, வீடுகள் மற்றும் சாயப் பட்டறை நிறுவனங்களுக்கு விற் பனை செய்து வந்துள்ளார். சில ஆண்டுகளாக இந்த தொழிலில் ஈடுபடவில்லை. சிவசுப்பிரமணி யத்தின் மகன் நவீந்திரன் பெருந் துறை கொங்கு இன்ஜினீயரிங் பொறியியல் கல்லூரியில், எம்.பி.ஏ. படிப்பை 2 ஆண்டுகளுக்கு முன் முடித்துள்ளார். திமுகவில் 1-வது பகுதி இளைஞர் அணி அமைப்பாளராகவும் உள்ளார்.

மகனுக்கு தொழில் அமைத்துத் தர நினைத்த சிவசுப்பிரமணியம், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, தண்ணீர் விற்பனையைத் தொடங்கி யுள்ளார். இதற்காக, சரக்கு வேன் ஒன்றை விலைக்கு வாங்கி, ’நவீன் வாட்டர் சப்ளையர்ஸ்’ என்ற பெயரில் கடந்த ஒரு மாதமாக இயக்கி வந்துள்ளார்.

வாகன ஓட்டுநர்

இந்த வாகனத்துக்கு ஓட்டு நராக ஸ்டாலின் (33) என்பவரை வேலைக்குச் சேர்த்துள்ளார் இவர், வேலைக்குச் சேர்ந்த சில தினங்களிலேயே, ஸ்டாலின் முன்பணமாக ரூ.15 ஆயிரம் பெற்றுள்ளார். பணம் பெற்றதைத் தொடர்ந்து, வேலைக்கு அன்றாடம் வராமல், திடீர் திடீரென விடுப்பு எடுத்துள்ளார். அத்துடன், கடந்த 15 நாட்களாக வேலைக்கு வராமல், நேற்று முன் தினம் வேலைக்கு வந்துள்ளார். அப் போது, ஸ்டாலினிடம் வேலைக்கு வராதது குறித்து சிவசுப்பிரமணி யம், நவீந்திரன் ஆகியோர் கேட்டுள்ளனர். இதில், ஆத்திர மடைந்த ஸ்டாலின், முதலில் நவீந்திரனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்து, நீர் எடுக்கும் கிணற்றில் வீசியுள்ளார். சிவசுப்பிர மணியத்தை சரக்கு வேன் அரு கிலும், மனைவி சாரதாம்பாளை வீட்டில் மாடுகள் கட்டப்பட்டுள்ள இடத்திலும் தாக்கியுள்ளார்.

கதறிய கர்ப்பிணி

வீட்டுக்குள் இருந்த நிறை மாத கர்ப்பிணியான ஷோபனாவுக்கு தாய், தந்தை, தம்பி ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவம் தெரிய வில்லை. அந்நேரத்தில், ஷோபா னாவை வீட்டின் முன்பு வைத்து ஸ்டாலின் தாக்கியுள்ளார். தலை மற்றும் கையில் பலத்த காய மடைந்த நிலையில், வீட்டுக்கு வெளியே வந்து கதறியுள்ளார் ஷோபனா.

அக்கம் பக்கத்தினர் வீட்டுக் குச் சென்று பார்த்தபோது, சிவசுப்பிர மணியம், சாரதாம்பாள் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்துள்ளனர். அவர்களை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தம்பதியர் உயிரிழந்தனர். வீட்டிலுள்ள கிணற் றிலிருந்து, நவீந்திரனின் சடலத்தை நேற்று முன்தினம் இரவு போலீ ஸார் மீட்டனர். கொடூரத் தாக்கு தல் நடத்திய வாகன ஓட்டுநர் ஸ்டாலின், அங்கிருந்து வீட்டின் பின் பக்க தோட்டப் பகுதி வழி யாக தப்பியுள்ளார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் எஸ்.என்.சேஷசாய் உத்தரவுப்படி 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT