தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அதிமுக அரசின் ஊழல்களை துறை வாரியாக பட்டியலிட்டு ஆளுநர் கே.ரோசய்யாவிடம் அளித்துள்ளோம். எங்களது புகார்கள் மீது அவர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம். ஒரு மாதத்துக்குப் பிறகும் நடவடிக்கை இல்லை என்றால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவுசெய்வோம்.
காங்கிரஸ் புகார் கூறிய பிறகே வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். இதேநிலைதான் நாங்கள் புகார் தெரிவித்துள்ள மற்ற அமைச்சர்களுக்கும் ஏற்படும்.
காங்கிரஸை போல திமுகவும் ஊழல் பட்டியலை அளிக்கும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் ஊழலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றி ணைந்து போராட முன்வர வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.
இளங்கோவன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கை: சென்னை மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் மற்றும் திருவல்லிக்கேணி அயோத்தி யாகுப்பம் ஆகிய பகுதிகளில் காலம் காலமாக வசித்து வந்த மீனவர்களுக்கு புதிய குடியிருப்பு களை கட்டித் தருவதாகக் கூறி அவர்கள் வசித்த வீடுகளை அரசு இடித்தது. இது நடந்து 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், புதிய குடி யிருப்புகளை கட்டுவதற்கு இது வரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட வில்லை. இதைக் கண்டித்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டதால் கைதான மீனவர்களை விடுதலை செய்வ தோடு, அவர் களது கோரிக் கையில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு அரசு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று இளங்கோவன் கூறியுள்ளார்.