தமிழகம்

ஜெயலலிதா பதவியேற்பு அரங்குக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது

செய்திப்பிரிவு

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கும் நிகழ்வுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த தொலைபேசி மிரட்டல் தொடர்பாக ஒருவரை சென்னை போலீஸார் கைது செய்தனர்.

ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ள விழா, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடக்கவுள்ளது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக நடந்து வருகின்றன. அரங்கை புதுப்பிப்பது, விஐபிகளுக்கு இருக்கை ஒதுக்குவது, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் இரவு, பகலாக நடக்கிறது.

இந்த நிலையில், ஜெயலலிதா பதவியேற்கும் அரங்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து நேற்று நள்ளிரவு ஒரு மர்ம தொலைபேசி மிரட்டல் வந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், ஒருவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT