ஆழ்கடலில் மீன்பிடித்தல் தொட ர்பாக மத்திய மீன்வளத் துறை கடந்த ஆண்டு வெளியிட்ட புதிய விதிமுறைகள், மீனவர்களின் வாழ் வாதாரத்தை பாதிக்கும் வகையில் இருப்பதால் அவற்றை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது:
அயல்நாட்டு மீன்பிடி படகு களை நம் நாட்டு பிரத்தியேக பொருளாதார மண்டல பகுதிகளில் அனுமதிப்பது மற்றும் உள்நாட்டு மீன்பிடி படகுகளுக்கு கூடுதல் கட்டுப்பாடு விதிப்பது குறித்து மத்திய வேளாண் அமைச்சகம் சமீபத்தில் புதிய முடிவுகள் எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 12-ம் தேதி மத்திய கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளத் துறை மற்றும் மத்திய வேளாண் துறை இணைந்து ஆழ்கடல் மீன்பிடித்தல் தொடர்பாக புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளன. ஏற்கெனவே 2004 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட விதிமுறைகளை மாற்றி ஆழ்கடல் மீன்பிடி படகு களின் மொத்த நீளம் 20 மீட்டரில் இருந்து 15 மீட்டராக அப்போது குறைக்கப்பட்டது. மேலும், 49 சதவீத அயல்நாட்டு பங்குடன் கூடிய கூட்டு முயற்சியில் ஆழ்கடல் மீன்பிடி நிறுவனங்கள் செயல்படலாம் என்றும் கூறப்பட்டது.
அதன் பிறகு, மத்திய வேளாண்மை மற்றும் கால்நடை துறைகளால் வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில், பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் பயன் படுத்தப்படும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளின் நீளத்தை 15 மீட்டருக்கு மேல் உயர்த்தினால் அனுமதி பெறவேண்டும் என கூறப்பட்டது. ஏற்கெனவே இதுபோன்ற விதிகள் இல்லாததால், 15 முதல் 20 மீட்டர் அளவிலான படகுகள் அனுமதிக் கடிதம் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உகந்தது அல்ல
மத்திய அரசின் புதிய விதிமுறை களால் தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தமிழகத்தில் உள்ள 5,500 விசைப்படகுகளில் 80 சதவீத படகுகள் 15 மீட்டர் நீளத்துக்கு அதிகமானவை. எனவே, மத்திய அரசிடம் இருந்து அனுமதிக் கடிதம் பெறுவதும், கடலோர காவல் படையிடம் இருந்து பயண அனுமதி பெறுவதும் நடைமுறைக்கு உகந்தது அல்ல. இந்த புதிய விதிமுறைகள் ஏற்கெனவே இருக்கும் சட்டத் துக்கு புறம்பானவையும்கூட. தமிழகம் உள்ளிட்ட இந்திய மீனவர்கள் மத்தியில் புதிய விதிமுறைகள் பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
ஆலோசிக்க வேண்டும்
பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் இந்திய மீனவர்களின் உரிமைகள் தடுக்கப்படுவதை தமிழக அரசு எதிர்க்கிறது. பிரத்தி யேக பொருளாதார மண்டலத்தில் நமது மீனவர்கள் மீன்பிடிப்பதை புதிய விதிமுறைகள் பாதிக்கும். அத்துடன், வெளிநாட்டு பெரிய மீன்பிடி படகுகளுடன் நம் மீனவர்கள் போட்டி போடும் கட்டாயத்தையும் ஏற்படுத்துகிறது.
எனவே, மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை கடந்த நவம்பர் மாதம் வெளியிட்ட புதிய விதிமுறைகளை ரத்து செய்ய அறிவுறுத்த வேண்டும். புதிய மீன்பிடி சட்டம் வரும் வரை, மீன்பிடி செயல்பாடுகள் தொடர்பான புதிய விதிகளை மத்திய அரசு கொண்டுவரக் கூடாது.
புதிய சட்ட மசோதா கொண்டுவரும் முன்பு கடல்சார் மாநிலங்களின் மீன்வளத் துறை அமைச்சர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.
நிராகரிக்க வேண்டும்
ஆழ்கடல் மீன்பிடி கொள்கை, விதிமுறைகள் தொடர்பாக டாக்டர் பி.மீனாகுமாரி குழு அளித்த பரிந்துரை, மீனவர்களின் வாழ் வாதாரத்தை பாதிக்கும் என்பதால் அதை நிராகரிக்க வேண்டும்.
நம் நாட்டின் பிரத்தியேக பொருளாதார மண்டல பகுதியில் வெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. ஆழ்கடல் மீன்பிடித்தல் தொடர்பாக வெளிநாட்டவர் அல்லது வெளி நாட்டு நிறுவனத்துடன் எந்த ஒரு ஒப்பந்தம், கூட்டு முயற்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. பிரத்தி யேக பொருளாதார மண்டலத்தில் நமது பாரம்பரிய மீனவ சமுதாயத்துக்கான மீன்வளத்தை பாதுகாக்க வேண்டும்.
மொத்த நீளம் 24 மீட்டரைவிட அதிகமானவை ஆழ்கடல் மீன் பிடி படகுகள் என்றும், அதைவிட குறைந்தவை இதர பகுதி மீன்பிடி படகுகள் என்றும் தெளிவு படுத்த வேண்டும்.
இந்த விஷயத்தில் படகுகளை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அந்தந்த மாநிலங் களுக்கே வழங்க வேண்டும்.
முக்கியத்துவம் தேவை
ஆழ்கடல் மீன்பிடி படகுகளை நிறுத்த சிறப்பு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், உள்நாட்டு, வெளிநாட்டு சந்தை களில் மீன்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை சம்பந்தமாக உரிய உத்தரவுகள் பிறப்பிக்க மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறைக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதால் இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.