நியூட்ரினோ ஆய்வுமையத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேனியில் மக்கள் இயக்கம் அமைப்பின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சிபிஐ (எம்.எல்) ரெட்ஸ்டார் மாநிலச் செயலாளர் ஆர்.துரைசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் த.நாகராஜன் வரவேற்றார்.
கருத்தரங்கில் நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராகப் போராட மக்கள் இயக்கம் என்ற புதிய குழு அமைக்க தீர்மானம் நிறைவேற்றி, அக்குழுவின் தலைவராக தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் பொதுச்செயலாளர் விசாகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருங்கிணைப்பாளராக சிபிஐ (எம்.எல்) ரெட்ஸ்டார் மாவட்டச் செயலாளர் த.நாகராஜன் உட்பட 7 பேர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு மக்கள் இயக்கத்தின் அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் பி.ஜே. ஜேம்ஸ், தலைவர் ஜான் பெருவந்தனன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.