தமிழகம்

ட்வீட்டாம்லேட்: மோடி அரசின் ஓராண்டு... என்ன சொல்கிறது ட்விட்டர் உலகம்?

க.பத்மப்ரியா

மோடி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியின் ஓராண்டு நிறைவையொட்டி, அரசியல் நோக்கர்கள், அயல்நாட்டு பத்திரிகைகள் விமர்சனங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

ட்விட்டரில் தொடர்ந்து சமூகப் பிரச்சினைகள், அரசியலை முன்வைத்து குறும்பதிவுகளைத் தமிழிலேயே பதிவு செய்து வரும் சமூக வலைத்தள உலகம் என்னதான் சொல்கிறது?

ஹேஷ்டேக் இட்டோ அல்லது ஹேஷ்டேக் இடாமலோ #மோடி எனத் தேடினால், நூற்றுக்கணக்கான விமர்சனங்கள் குவிந்துள்ளன. அவற்றில் சில இன்றைய ட்வீட்டாம்லேட்டில்...

சி.பி.செந்தில்குமார் ‏@senthilcp - மக்களை வறுமை கோட்டிற்கு வெளியே கொண்டு வருவேன் #மோடி #வெளிநாட்ல இருந்துக்கிட்டேவா?

சத்தி லிங்க் ‏@sathii1 - நாட்டின் காவலாளியாகத் தான் நான் செயல்படுகிறேன்!! #மோடி | காவாளினு படிச்சுட்டேன்!! :(

Arul ‏@Arul28667667 - மக்களை வறுமை கோட்டிற்கு வெளியே கொண்டு வருவேன் #மோடி அதுக்கு மொதல்ல நீங்க இந்திய எல்லை கோட்டுக்கு உள்ளே வரனும் ஜி.

தோழர்.உரப்பு ‏@iurappu - மோடியின் ஓர் ஆண்டு சாதனை! #தமிழ் கடவுள் முருகனுக்குப் பிறகு உலகை சுத்தி வந்ததே சாதனை!

ARAVIND BE civil., ‏@AravindBEcivil - #மோடி அரசின் ஓராண்டு சாதனையை விளக்க பா.ஜ., அதிரடி திட்டம். ~ ஒரே நாள்ல உலகத்த சுத்தி வரப்போறாங்களோ...!

Five5starA ‏@Five5starA - நல்லவேல #மோடி அய்யா #ஜெ. பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு வல்ல. இல்லாட்டி #தமிழ்நாட்ட சுத்தி ஒரு வலம் வந்துருப்பாரு.

Sen ‏@Sen_Tamilan - உலகை சுற்றும் #மோடி-யை விட, ஓட்டு வங்கியைச் சுற்றும் #ராகுல் பழத்தை வாங்கிடுவார் போலவே!

$ath!sh© ‏@SatzTalks - உலகிலேயே நமது பிரதமர் #மோடி தான் நம்பர் 1 என்று தெரியுமா?. எதில்? வித, விதமாக போட்டோ எடுப்பது, 'செல்பி' எடுப்பது.

Niyas ‏@niyasmdu - போற ஊர்லயெல்லாம் நாலஞ்சு போட்டோ எடுத்து வச்சுட்டு, இதுதான் #குஜராத் வளர்ச்சினு அடுத்த தேர்தல்ல பிரச்சாரம் பண்ணா அதுதான் #மோடி டிசைன்.. :p

நட்புக்காக ‏@natpukkagaa- தட் உனக்கேன்ன வேணும் சொல்லு உலகத்தை காட்ட சொல்லு புது இடம் புது மேகம் தேடி போவோமே மொமண்ட் #மோடி அறிந்தால்.

களிறு ‏@iam_shahh - அவருக்கே தெரிஞ்சிருக்கு அடுத்த தடவ நம்மல தேர்ந்தெடுக்கமாட்டானுக. அதனால முடிந்த வரை கஜானவ காலி பண்ண உலகம் சுற்றுறாரு போல #மோடி சுற்றுலா.

zubbair Ahamed ‏@adzubair2014 - ஓராண்டாக ஓய்வே இல்லை. #மோடி நீங்க போற ப்ளைட்டதானே சொல்லுறீங்க.

ராஜா ‏@mynameisramiz - இந்தியாவ விட்டு வெளிய போய் நின்னு பாத்தாதான் தெரியுது.. இந்தியா எவளோ வளந்திருக்குன்னு.. போன வாரம் 2 மீட்டார் .. இந்த வாரம் 5 மீட்டர் #மோடி.

மொக்கராசு ‏@mokrasu - விருந்தாளி வீட்டுக்கு வந்தா நம்மளுக்குத்தான செலவு. அதனால நாம அங்க போன!!?? #மோடி லாஜிக்.

சுடர்கொடி ‏@sudarkodii - வருமானத்துக்கு அதிகமா உலகம் சுத்துறவங்களுக்கெல்லாம் தண்டனை கிடையாதா? #மோடி.

Atrocity அந்நியன் ™ ‏@TamilAnniyan - நல்லா ஊர சுத்துரது .... பெட்ரோல் கணக்கு நம்ப மேல போடாவேண்டியது .... #மோடி.

க.புருஸ்லீ அரியலூர் மாவட்டம் பா.ம.க - ஏழைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது அரசு: மக்களுக்கு பிரதமர் ‪#‎மோடி‬ திறந்த மடல்.. ‪#‎யாரும்‬ விவசாயம் செய்து கஷ்டப்பட வேண்டாம் அதனால் உங்கள் நிலங்களை அரசு அபகரிக்கும்...

நுண்மதியோன் ‏@Nunmathiyon - எல்லாத்துக்கும் சாதனை விளம்பரம் கொடுத்துடுறாங்க. அவிகளுக்குத்தான் உலக அறிவு இல்லையா, எனக்குத்தான் வெவரம் பத்தலையா ..ஒன்னும் புரியல.

நாகசோதி நாகமணி ‏@nagajothin - மோடியின் ஓராண்டு சாதனை ஒருவேளை குன்ஹா சொன்னா 4 மணி நேர தீர்ப்பு,குமாரசாமி 4 நிமிசத்துல மாத்தி சொன்ன தீர்ப்பையும் சேர்த்து சொல்ல வருவாங்க போல.

S.K Soundhararajan ‏@SSk0005556 - விவசாயி தற்கொலை கூட அரசியல் செய்து பாஜகவின் ஓராண்டு சாதனை தான்.

Dr S RAMADOSS ‏@drramadoss - மோடி ஆட்சியின் ஓராண்டு நிறைவு: ஏமாற்றங்கள் போதும்.... இனியாவது மாற்றங்களைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

⇝அருண் குமார்⇜ ‏@Arun_Dct - பல வருடங்களாக நிலவில் வடை சுட்டு கொண்டிருக்கும் பாட்டியை பிரதமர் மோடி சென்று அழைத்து வருவார் என எதிர்பார்க்கபடுகிறது.

Sheeba ‏@sheeba_v - இவங்க மோடி வெளிநாட்டு பயணத்தால இந்தியாவுக்கு கிடைக்கும் நன்மைன்னு போடுற பட்டியல மோடிட்ட காட்டினா அவரே நம்ப மாட்டார்!!

சிங்கத்தின் கர்ஜனை ‏@AandeaDA - உலகம் எப்படி இருக்கு என விசாரிப்பதற்கு தகுதியான நபர் நம்ம நரேந்திர மோடி தான்.

The Protagonist ‏@arvinfido - நல்லாட்சியால மாற்றம் ஏற்படும்னு இருந்தவகளோட கடைசி நம்பிக்கை மோடி. அதை சிதைக்காம ஒரு வருடத்தை கடந்ததுக்கு நம் பிரதமருக்கு பாராட்டுக்கள்.

SCROLL FOR NEXT