பிளஸ் 2 தேர்வு எழுதி முடித்துள்ள மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்று நாளை முதல் பள்ளிகளில் வழங்க தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியானது.
மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களுடன் மதிப்பெண் சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், தற்காலிக மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்த மதிப்பெண் பட்டியல் மாணவர்கள் படித்து முடித்த பள்ளிகளிலேயே கிடைக்கும். இது ஆறு மாத காலத்துக்கு செல்லுபடியாகும். அதற்குள் நிரந்தர மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும்.